CINEMA
எம்ஜிஆர் நடித்த சில காட்சிகளை வைத்து திரைப்படமாக உருவாக்கி நடித்த இயக்குனர் கே பாக்யராஜ் – கைவிடப்பட்ட எம்ஜிஆர் படம் மீண்டும் ஒரு திரைப்படமாக உருவானது எப்படி தெரியுமா?
கடந்த 1977ம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் லதா நடித்து எடுக்கப்பட்ட படம் அண்ணா நீ என் தெய்வம். இந்த படம் குறிப்பிட்ட சில முக்கிய காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் நடிகராக இருந்த எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகி விட்டார். அதனால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது.
அப்படி பாதியில் கைவிடப்பட்ட அண்ணா நீ என் தெய்வம் படத்தின் 4000 அடி பிலிம் ரீல்களை வாங்கி, எடுக்கப்பட்ட அந்த காட்சிகளுக்கு ஏற்றபடி ஒரு திரைக்கதையை எழுதி இயக்குனர் கே பாக்யராஜ் உருவாக்கிய படம்தான் அவசர போலீஸ் 100. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு வெளியான ஒரே எம்ஜிஆர் படம் இதுதான். கைவிடப்பட்ட ஒரு படம் மறு ஜென்மம் எடுத்ததெல்லாம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஒரு சம்பவமாக இருந்தது. அதை நிகழ்த்திக் காட்டியவர் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
