CINEMA
ஒரு படத்தில் 2 நடிகைகள் நடித்தால் இதுதான் முக்கிய பிரச்னையா? படத்தின் இயக்குனர் நடிகர் விஷால் மீது பயங்கர கோபத்தில் உள்ள நடிகை துஷாரா விஜயன் – என்ன நடந்தது தெரியுமா?
நடிகர் விஷால் இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மகுடம் படத்தில் நாயகனாக நடித்து வரும் விஷால் இந்த படத்தை முதன்முறையாக இயக்கவும் செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகை துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகையாக உள்ளார். ராயன் வேட்டையன் வீர தீர சூரன் 2 உள்ளிட்ட படங்களில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் மகுடம் படத்தில் துஷாரா விஜயன் மட்டுமின்றி நடிகை அஞ்சலியும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அஞ்சலியை ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்து தன்னை டம்மி பண்ணி விட்டதாக இயக்குனர் விஷால் மீது நடிகை துஷாரா விஜயன் கடும் கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 2 நடிகைகள் ஒரு படத்தில் நடித்தால் எப்பவும் இந்த ஈகோ பிரச்னைதானா என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
