CINEMA
மௌனி ராயின் அந்த ஒரு வார்த்தை…விவாகரத்து, வதந்திகள், தனிமை…நான் லெஸ்பியன் இல்லை!”… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நாகினி நடிகை மௌனி ராய்…!
பிரபல பாலிவுட் மற்றும் சின்னத்திரை நடிகையான மௌனி ராய், தனது கணவர் சுராஜ் நம்பியாரை பிரிந்து விவாகரத்து பெற முடிவெடுத்துள்ள செய்தி சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2022-ஆம் ஆண்டு கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணம், இரண்டு ஆண்டுகளிலேயே மனக்கசப்பில் முடிவடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாகினி’ சீரியல் மூலம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மௌனி ராய், பின்னர் பாலிவுட்டில் ‘பிரம்மாஸ்திரா’ உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர்களது விவாகரத்து முடிவைத் தொடர்ந்து, பாலிவுட் ஊடகங்களில் மௌனி ராய் குறித்து பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மௌனி ராய், தன் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தொகுப்பாளர் அவரிடம், “உங்களைப் பற்றி பரவும் வதந்திகளில் எது உங்களை அதிகம் ஆச்சரியப்படுத்தியது?” என்று கேட்டதற்கு, தான் ஒரு ‘லெஸ்பியன்’ (Gay) என்று பரப்பப்படும் வதந்தி தான் மிகவும் விசித்திரமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல. எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே நாங்கள் பிரிய முடிவெடுத்தோம்” என்று மிகவும் ஓப்பனாகப் பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தாலும், தனது தற்போதைய சூழ்நிலையைக் கடந்து வர தனது குடும்பமும் தோழிகளும் தனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பதாக மௌனி ராய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். “என் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றாலும், மலை போல என்னைத் தாங்கிப் பிடிக்க நல்ல தோழிகள் எனக்குக் கிடைத்துள்ளனர்; அவர்களே என் பலம்” என்று அவர் பேசியுள்ளார். வதந்திகளைப் பற்றி கவலைப்படாமல் தனது அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி தைரியமாக நகரும் மௌனி ராயின் இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
