CINEMA
அவன் ஆசை தான் என்ன…? மகனை நினைத்து கதறிய தாய்…. கோபிநாத்தே கலங்கி நின்ற தருணம்..!!
விஜய் தொலைக்காட்சியில் வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நீயா நானா. இது ஒரு விவாத நிகழ்ச்சி. தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியை நீண்ட நாட்களாகவே தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதிக்கப்படும். இவ்வாறு நீயா நானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பும். இந்த நிலையில் இந்த வாரம் ஆசை இருந்தும் கேட்காத பிள்ளைகள்… பிள்ளைகளை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பெற்றோர் என்று இரண்டு தரப்பினராக கலந்து கொண்டார்கள்.
அதில் தாய் ஒருவர் தன்னுடைய மகன் தற்போது இளைஞராக உள்ளார். அவருக்கு இதுவரை எந்தவித ஆசையும் இருந்தது இல்லை. தற்போது நிகழ்ச்சிக்காக அவர் போட்டிருக்கும் ஆடை கூட நான் கட்டாயமாக வாங்கிக் கொடுத்தது தான் என்ன கேட்டாலும் வேண்டாம் என்று கூறுவார் அழுதபடி கூறி உள்ளார்.
இது குறித்து அந்த பையனிடம் கோபிநாத் கேட்கும் பொழுது என்னிடம் ஆடைகள் இல்லை அணிந்து கொள்வதற்கு மூன்று ஆடைகள் தான் இருக்கிறது என்று கண்ணீர் விட்டபடி கூறுகிறார். இந்த எபிசோடை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இது போன்ற பிள்ளைகள் சமூகத்தில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாகவும் இருக்கிறது.