CINEMA
“திருப்பாச்சி” படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச மல்லிகாவா இது…? இப்படி ஆளே மாறிட்டாங்களே…!!
திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக வரும் நடிகையின் புகைப்படமானது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் வருடம் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய் திரிஷாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இந்த திரைப்படத்தில் விஜய், திரிஷா, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தார்கள் .அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜயின் அன்பு தங்கையாக நடிகை மல்லிகா நடித்திருந்தார்.
இவர் சேரன் இயக்கிய நடித்த ஆட்டோகிராப் படத்தில் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து மல்லிகா கடைசியாக சரத்குமார், சேரன், பிரசன்னா நடிப்பில் வெளியான சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் சினிமா பக்கம் காணவில்லை எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்ற அப்டேட்டும் இல்லை.
இந்த நிலையயில் சமீப காலமாகவே 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிரபலங்களின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது திருப்பாச்சி படத்தில் நடித்த நடிகை மல்லிகாவின் குடும்ப புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது மல்லிகாவா இது? ஆளே அடையாமல் தெரியாமல் மாறிவிட்டார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.