CINEMA
G.O.A.T படத்தில் விஜயகாந்த் வரும் காட்சி எப்படி இருக்கும் தெரியுமா…? வெறித்தனமா இருக்கும் போலயே..!!
செப்டம்பர் 5ஆம் தேதி அன்று உலகம் எங்கும் கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இதனுடைய ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கோட் பட குழு பிரேமலதாவை சந்தித்தார். இது மூலம் கோட் படத்தில் கேப்டன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட் படத்தில் சுமார் 3.5 நிமிடங்கள் மூலம் தோன்றுவார் என்று கூறப்படுகிறது. அந்த காட்சியும் பிரம்மாண்டமாக வந்துள்ளதாக விஜய் கூறியுள்ள நிலையில் கண்டிப்பாக திரையரங்கில் விஜயகாந்த் வரும் காட்சி வெறித்தனமாக இருக்கப் போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.