CINEMA
பிரேமலதாவை சந்தித்த ‘G.O.A.T’ படக்குழு…. என்ன காரணம் தெரியுமா…? இயங்குனர் VP பகிர்ந்த தகவல்…!!
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை விஜய், வெங்கட்பிரபு, அர்ச்சனா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அதாவது, ‘G.O.A.T’ படத்தில் விஜயகாந்த் AI மூலம் தோன்றுவதற்கு அனுமதி அளித்ததற்கு அவர்கள் நன்றி தெரிக்க சென்றுள்ளனர். மேலும், விஜயகாந்த் தொடர்பான காட்சிகளை பிரேமலதாவுக்கு காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.