CINEMA
என் முதல் படத்தில் விஜயகாந்த் சாரை கொண்டாட நினைத்தேன்…. என் ஆசை நிறைவேறிவிட்டது – இயக்குநர் தமிழரசன் ஓபன் டாக்…!!
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த வெளிவந்த திரைப்படம் லப்பர் பந்து. இந்த படத்தில் சஞ்சனா, பால சரவணன், சுவாசிக்க உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது . இந்த படத்தில் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் என்ற விஜயகாந்த் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் தமிழரசன் அளித்துள்ள பேட்டியில், இயக்குனராகி படம் எடுத்தால் என்னுடைய முதல் படத்தில் விஜயகாந்த் சாரை கொண்டாட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. இன்று அந்த ஆசை நிறைவேறி விட்டது என்று கூறியுள்ளார்.