CINEMA
என் அப்பாவுக்கு பிறகு மாரி சார் கிட்ட தான் அதை பார்த்தேன்…. எமோஷனலாக பேசிய நடிகர் துருவ விக்ரம்…!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா தயாரிக்கிறார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று ‘வாழை’ படத்தின் Pre Release நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் துருவ விக்ரம், அப்பாவுக்கு பிறகு மாரி சார் கிட்டதான் கடின உழைப்பை பார்த்தேன். அவரும் எனக்கு அப்பா மாதிரிதான் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.