CINEMA
அப்பாவை நினைத்து கதறி கதறி அழுத மகன்கள்….. விஜயகாந்த் நினைவிடத்தில் இப்படியொரு சோகம்…!!
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் 72 வது பிறந்த தினம் நேற்று சோகத்தோடு கொண்டாடப்பட்டது. கடந்த வருடம் இறுதியில் மறைந்த போது ஒட்டுமொத்த தமிழகமே கலங்கியது. இன்று அவர் இல்லாத முதல் பிறந்தநாளில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள் . மதுரை மண்ணிலிருந்து சினிமா கனவோடு சென்னைக்கு புறப்பட்ட இவர் பிற்காலத்தில் சினிமா உலகையே கட்டி ஆண்ட வரலாறு. தன்னுடைய நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்திருந்தார்.
இவருடைய பிறந்தநாளில் தொண்டர்கள் ரசிகர்கள், அரசியல், பிரபலங்கள் என பலரும் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் அவருடைய மகன்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சல் செலுத்தினார்கள். அப்பொழுது அவர்கள் தன்னுடைய அப்பாவை நினைத்து கதறி அழும் காட்சிகள் மனதை கரையச் செய்கிறது.
View this post on Instagram