VIDEOS
அரங்கமே அதிர மனைவிமார்கள் போட்ட ஆட்டம்.. அப்பாவியாக நின்ற கணவர்கள்.. சிரிப்பை அடக்க முடியாமல் கோபிநாத்.. வைரல் வீடியோ..!;
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். அதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சிக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இந்த வாரம் தன்னுடன் நடனமாட சொல்லும் மனைவி மற்றும் ஆட மறுக்கும் கூச்சப்படும் கணவன் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அதில் தன்னுடன் நடனமாட தயங்கக்கூடிய கணவர்களை பெண்கள் விடாமல் டார்ச்சர் செய்து ஆட வைப்பது மட்டுமல்லாமல் அவர்களை பேச முடியாத அளவிற்கு மூச்சு திணற வைக்கவும் செய்துள்ளனர்.
இதனைப் பார்த்த கோபிநாத் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தபோது அப்பாவியாக நின்ற கணவன்மார்களை பார்க்க மிகவும் பாவமாக இருந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.