VIDEOS
காதல் பரிசை சமந்தாவின் கையில் கொடுத்து கியூட்டாக லவ் ப்ரபோஸ் செய்த சீரியல் நடிகர்.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார்.
அதனைப் போலவே விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் நடித்த பிரதோஷ் அண்மையில் சமந்தாவை அழகிய பரிசு உடன் நேரில் சந்தித்துள்ளார். அவரிடம் தான் வாங்கி வைத்த அழகிய பரிசை கொடுத்து தன்னுடைய காதலை அழகாக வெளிப்படுத்தி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க