LATEST NEWS
இரத்தம் உறையும் மைனஸ் டிகிரி..! உடம்பில் ஒட்டு துணியோடு!! ஐஸ் பாத் எடுக்கும் நடிகைகள் ஏன் தெரியுமா..??

சினிமா பிரபலங்கள் சமந்தாவின் தொடங்கிய ராகுல் ப்ரீத் வரை பல சினிமா பிரபலங்கள் கோல்டு வாட்டர் தெரபி என்று சொல்லக்கூடிய ஐஸ்தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்கும் வீடியோக்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்கிறார்கள். மருத்துவ உலகில் இதனை கிரையோதெரபி என்று அழைக்கிறார்கள்.
நமது மனதிற்கும் உடலுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றதாம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய தோல் நலத்திற்கு இந்த ஐஸ் குளியல் பயன்படுவதாக நம்பபடுகிறது.இந்த கிரையோதெரபி முறையானது பல்வேறு வழிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஐஸ் பேக்ஸ், கூலண்ட் ஸ்ப்ரே, ஐஸ் மசாஜ், ஐஸ் குளியல் என இதில் பல வேரியேஷன்கள் இருக்கின்றன.

#image_title
கோல்டு வாட்டர் தெரபி என்பது 15 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலை கொண்ட நீரில் உங்கள் உடலை மூழ்கடித்து எடுப்பதாகும்.இதன் மூலம் நமது உடலின் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் ரிலீஸ் ஆவதாகவும், நமது மூளையில் இருக்கும் வேதியியல் பொருட்கள் அதிகப்படுத்தப்பட்டு, நமது மூடை சீராக வைக்க உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.

#image_title
குளிர்ந்த நீர் கொடுக்கும் திடீர் அதிர்ச்சி நமக்கு மன உறுதியையும், ஒழுக்கத்தையும் கொடுக்கும். தொடர்ச்சியாக இந்த குளிர் நமது உடலில் செலுத்தப்படும் போது, நமது மனது அசெளகரியமான சூழ்நிலையிலும் செளகரியமான தன்மையை ஏற்படுத்திக்கொள்கிறது. இது நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அழுத்தங்களை சமாளிக்கும் திறனை கொடுக்கும் என்றனர்.

#image_title