CINEMA
படிச்சிக்கிட்டே சுமை தூக்குறேன்…. நீயா நானாவில் கலங்கிய மாணவன்…. சர்பிரைஸ் கொடுத்த இசையமைப்பாளர் தமன்…!!
விஜய் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் படித்துக்கொண்டே வேலைக்கு செல்லும் மாணவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய மாணவர் ஒருவர் தான் படித்துக் கொண்டே வேலைக்கு செல்வதாகவும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பேருந்தை விட்டுவிட்டால் நடந்தே வீட்டுக்கு வருவதாகவும், வீட்டுக்கு வர பத்து மணி ஆகிவிடும் என்றும் என்னுடைய அம்மாவை நல்ல இடத்தில் வைப்பேன் என்றும் உருக்கமாக பேசியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இசையமைப்பாளர் தமனின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனை அடுத்து தமன் சொந்தமாக அந்த மாணவருக்கு ஒரு பைக்கை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் மாணவனை நேரடியாக அழைத்து அதை பரிசாகவும் கொடுத்துள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் தமிழ் கூறுகையில், இதை போல தான் சிறுவயதில் நானும் படித்துக்கொண்டே வேலை செய்து கஷ்டப்பட்டேன். எனக்கு இதுபோல கங்கை அமரன் உள்ளிட்டோர் தன உதவி செய்தார்கள் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இசையமைப்பாளர் தமனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.