VIDEOS
நீயா நானாவில் கோபிநாத் கேட்ட ஒத்த கேள்வி… அரங்கமே அதிர பதில் கூறிய பெண்… வெளியான ப்ரோமோ வீடியோ..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புகளுடன் நிகழ்ச்சி பல விவாதங்களுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழக மட்டுமல்லாமல் பல கோடி மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் கணவர் உழைக்கும் பணம் கணவனுடையது என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போது விவாதத்தில் ஒரு பெண், ஆண்கள் உழைக்கும் பணத்தில் பெண்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு எதிர் தரப்பில் ஒரு பெண் வீட்டிலிருந்து குழந்தைகளை, சமையலை பார்க்காவிட்டால் அவனுக்கு ஏது நிம்மதி என்று பேசியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிள்ளைகளுக்காக தங்களின் கனவுகளை தொலைக்கின்ற அம்மாக்களின் வேதனைகள் குறித்தும் பேசியுள்ளார். அது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/MY1np9_N4as
