LATEST NEWS
“பாட்டி… மோடிஜி போன்ல கூப்பிடுறாரு!”.. உடனே பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. இணையத்தை உலுக்கும் கியூட் வீடியோ..!!
மற்றவர்களைக் கேலி செய்யும் குறும்பு வீடியோக்கள் நிறைந்த இன்றைய காலத்தில், இந்த காணொளி எளிமைக்கும் அப்பாவிகத்தனத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வைரலான இந்த வீடியோவில், ஒரு பேரன் தன் பாட்டியிடம் மொபைல் போனில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் இன்ஸ்டாகிராம் ரீலைக் காட்டி, பாட்டி, மோடி ஜி உங்ககிட்ட தான் பேசுறாரு என்று கூறுகிறான். அதை உண்மை என நம்பிய அந்தப் பாட்டி, எவ்வித சந்தேகமும் இன்றி திரையிலிருக்கும் பிரதமரைக் கைகூப்பி வணங்கி, நிறைய மழை பெய்திருக்கிறது… என்று தனது குஜராத்தி-இந்தி கலப்பு மொழியில் நலம் விசாரிக்கத் தொடங்குகிறார். பேரன் மோடி ஜி எந்த மொழியில் பேசுகிறார்? எனக் கேட்டதற்கு, பாட்டி மிகவும் இயல்பாக அவர் இந்தியில் பேசுகிறார் என்று புன்னகையுடன் பதிலளிக்கிறார்.
Dadi modi collaboration 🤣🤣🤣 pic.twitter.com/3VLUVxnlHi— Alka Maurya (@MauryaAlka76391) July 27, 2026
வீடியோவின் இறுதியில், பாட்டி முழு அர்ப்பணிப்புடன் போனில் பேசி கொண்டிருப்பதைப் பார்த்து, பேரன் மென்மையாகச் சிரித்தபடி, “பாட்டி, இனி போனை வையுங்கள், நீங்கள் பேசியது போதும்” என்று கூறி போனை வாங்குகிறான். பேரனின் இந்த அன்பான விளையாட்டையும், பாட்டியின் களங்கமற்ற அப்பாவத்தனத்தையும் கண்டு நெகிழ்ந்த இணையவாசிகள், இந்த வீடியோவிற்கு மில்லியன் கணக்கில் விருப்பங்களையும் பார்வைகளையும் வழங்கி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
