யாருயா நீ…! சாமி கும்பிடறது சரிதான்… அதுக்காக ஏசி கோச்-லயே தீபமா..?!” ரயிலில் தீபம் ஏற்றிய பயணியால் அலறிய சக பயணிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாருயா நீ…! சாமி கும்பிடறது சரிதான்… அதுக்காக ஏசி கோச்-லயே தீபமா..?!” ரயிலில் தீபம் ஏற்றிய பயணியால் அலறிய சக பயணிகள்..!!

Published

on

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஓடும் ரயிலின் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணி ஒருவர் தனது மேல்படுக்கையில் அமர்ந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உடன் பயணித்த பயணிகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரைத் தடுக்க முயன்றனர். தீபம் ஏற்றுவதால் ரயிலில் உள்ள ஃபயர் அலாரம் அடித்துவிடும் என்றும், இது ஆபத்தானது என்றும் பயணிகள் எடுத்துக்கூறியும் அந்த நபர் அதைப் பொருட்படுத்தாமல் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்துள்ளார்.

ரயில்வே விதிகளின்படி, ரயிலுக்குள் தீப்பெட்டி, லைட்டர் பயன்படுத்துவது அல்லது திறந்தவெளியில் தீ மூட்டுவது ஆகியவை கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. ரயிலில் உள்ள படுக்கைகள், போர்வைகள், திரைச்சீலைகள் போன்றவை எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதால், ஓடும் ரயிலில் விளக்கு ஏற்றி வைப்பது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, எந்தவொரு மத நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை நினைவூட்டுவதற்காகவே இது பகிரப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளப் பயனர்கள் பலரும் அந்த நபரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘பொது அறிவு அல்லது நாகரிக உணர்வு இல்லாமல் நடப்பவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்’, ‘இவரைப் போன்றவர்களை ரயிலில் பயணிக்கத் தடை செய்ய வேண்டும்’ மற்றும் ‘சிறையில் அடைக்க வேண்டும்’ என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து, ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைக்காகக் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in