LATEST NEWS
“நானும் ரவுடிதான்டா…!” வேட்டைக்காரச் சிறுத்தையை உயிரைக் கையில பிடித்துக்கொண்டு ஓடவைத்த நீல்காய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
காட்டு உலகத்தில் எந்த நிமிடத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பொதுவாகச் சிறுத்தை போன்ற கொடூரமான வேட்டை விலங்குகளைக் கண்டால் மற்ற விலங்குகள் பயந்து ஓடும். ஆனால், சமீபத்தில் ரந்தம்பூர் காட்டுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறுத்தை, தனக்கு எளிமையான இரையாக இருக்கும் என்று நினைத்து நீல்காயை நோக்கியவாறு மெதுவாகவும் தந்திரமாகவும் மிக அருகில் வரை வந்தது. அதைப் பார்த்தவர்கள், சிறுத்தை நிச்சயம் நீல்காய் மீது தாக்குதல் நடத்திவிடும் என்றே நினைத்தனர்.
ஆனால், வழக்கமாக ஆபத்தைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கும் விலங்குகளைப் போல இந்த நீல்காய் நடந்து கொள்ளவில்லை. சிறுத்தை மிக அருகில் வந்ததும், நீல்காய் சற்றும் பயப்படாமல் தனது இடத்திலேயே உறுதியுடன் நின்றது. அதுமட்டுமின்றி, தான் பயந்து பின்வாங்காமல், சிறுத்தையை எதிர்த்து அதை நோக்கி தைரியமாக முன்னேறத் தொடங்கியது. நீல்காயின் இந்த திடீர் எதிர்ப்பை எதிர்பார்க்காத சிறுத்தை, சில விநாடிகள் திகைத்துப்போய் அதிர்ச்சியடைந்தது.
https://www.instagram.com/reel/Db5HQTrzq_b/?utm_source=ig_web_button_share_sheet
நீல்காய் தொடர்ந்து சிறுத்தையை அச்சுறுத்தும் வகையில் துரத்தத் தொடங்கியதால், வேறு வழியின்றி அந்த வேட்டைக்காரச் சிறுத்தையே பின்வாங்கி அங்கிருந்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. காட்டிற்குள் வேட்டையாடுவதற்கு உடல்பலம் மட்டுமே முக்கியமல்ல, சரியான நேரத்தில் காட்டும் தைரியமும், தன்னம்பிக்கையும்தான் முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
