LATEST NEWS
“அடக்கடவுளே!.. தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் பைக் ஓட்டுநர்… காரை நிறுத்தாமல் பறந்த கொடூர ஓட்டுநர்.. உறைந்துபோக வைக்கும் வீடியோ..!!”
பெங்களூரு விஜயநகர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பசவேஸ்வரநகரில், அதிவேகமாக வந்த ஹூண்டாய் கார் ஒன்று லிகித் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கொடூரமாக மோதியது. மோதிய வேகத்தில் லிகித் சாலையில் தூக்கி எறியப்பட்டு காயமடைந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் அவருக்கு உதவ முன்வராமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், உடனடியாகக் காயமடைந்த லிகித்தை மீட்டு உதவி செய்ததோடு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
Bengaluru – A hit-and-run incident occurred in Bengaluru when a speeding Hyundai car struck a two-wheeler rider and fled the scene. The accident took place within the jurisdiction of the Vijayanagar traffic police station. The incident happened at Satyanarayana Layout in… pic.twitter.com/oVemwaJ8Zs— NextMinute News (@nextminutenews7) July 27, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விஜயநகர் போக்குவரத்து காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய அடையாளம் தெரியாத கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய வாகனத்தையும் ஓட்டுநரையும் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்புவது சட்டப்படி கடுமையான குற்றம் என எச்சரித்துள்ளதுடன், வாகன ஓட்டிகள் பொறுப்புடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
