‘கம் பேக் கைஸ்..!’ 16 கோடி வியூஸ் பெற்ற கணக்கு திடீர் முடக்கம்… ஒரே ராத்திரியில் ‘ரீ-என்ட்ரி’ கொடுத்து… மாஸ் காட்டிய அபினவ் பிஷ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கம் பேக் கைஸ்..!’ 16 கோடி வியூஸ் பெற்ற கணக்கு திடீர் முடக்கம்… ஒரே ராத்திரியில் ‘ரீ-என்ட்ரி’ கொடுத்து… மாஸ் காட்டிய அபினவ் பிஷ்ட்..!!

Published

on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய போராட்டத்தின் போது, அங்கிருந்து நேரலை புதுப்பிப்புகளை வழங்கி இணையத்தில் வைரலானவர் அபினவ் பிஷ்ட். வழக்கமான செய்தியாளர் பாணியில் இல்லாமல், டிக்டாக் பாணியில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, ஆர்.ஏ.எஃப் வீரர்களின் பின்புலத்தில் தனது நண்பர்களுடன் அவர் உருவாக்கிய ஒரு வீடியோ 16 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை 26 அன்று அபினவ் யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தபோது, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராம் தரப்பில் இருந்து எவ்வித முன் அறிவிப்போ அல்லது எச்சரிக்கையோ இன்றி தனது கணக்கு நீக்கப்பட்டதாக அபினவ் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Advertisement

https://www.instagram.com/reel/DbTVrVeOrel/?utm_source=ig_web_button_share_sheet

இருப்பினும், முயற்சிக்குப்பின் அபினவ் பிஷ்ட் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மீண்டும் மீட்டுள்ளார். கணக்கு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில், “கம் பேக் ஆயிடுச்சு கைஸ்” என்று கூறி ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். தனது கணக்கு மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் இரவு முழுவதும் தூங்கவே இல்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த கம் பேக் வீடியோவும் வெளியான சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளையும், லட்சக்கணக்கான லைக்குகளையும் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in