LATEST NEWS
“திமுகவை பழிவாங்கவே இப்படி செஞ்சேன்” அமெரிக்காவில் இருந்து 1500 வெடிகுண்டு மிரட்டல்… உண்மையை உடைத்த தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியர்..!!
அமெரிக்காவில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக 1,500-க்கும் மேற்பட்ட இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சரத் சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த ஆட்சியில் அரசு தேர்வு எழுதியும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனக்கு வேலை கிடைக்காததால், திமுக மற்றும் அதன் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தனக்கு தெரிந்த பேராசிரியை ஒருவர் பணம் கொடுத்து அங்கு வேலை வாங்கியதால் ஆத்திரம் அடைந்து, அந்த பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே 50-க்கும் மேற்பட்ட முறை மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் சரத் கூறியுள்ளார்.
நாடு அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்ததை சரத் ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக, எஸ்.வி. சேகர் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசியதாகக் கூறி, அவரது வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவுட்லுக் செயலி மூலம் மெயில் அனுப்பி வந்த சரத், ஒருமுறை தனது சொந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மெயில் அனுப்பியபோது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திறங்கியபோது விமான நிலையத்திலேயே அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பழிவாங்கும் நோக்கத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர் மிரட்டல்களை விடுத்து வந்த இந்த மென்பொறியாளரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
