நெலையையே உலுக்கிய கொடூரம்.. காதல் திருமணம் செய்த தொழிலாளிக்கு நேர்ந்த பயங்கர கதி.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நெலையையே உலுக்கிய கொடூரம்.. காதல் திருமணம் செய்த தொழிலாளிக்கு நேர்ந்த பயங்கர கதி.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ஆவுடையப்பன் (37). சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, ஒரு மகனும் மகளும் உள்ளனர். நேற்று காலை இவர் நெல்லை டவுன்-சங்கரன்கோவில் சாலையில் நடந்து சென்றபோது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் திடீரென இவருடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இந்த கொடூரத் தாக்குதலில் ஆவுடையப்பனின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள், கொலையாளிகளைக் கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்துள்ள நெல்லை டவுன் போலீசார், முன்பகை காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 2 பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in