LATEST NEWS
“ஏம்மா… ஒரு கையில கொடுத்தா எப்போ தாகம் தீருறது…? ரெண்டு கையையும் யூஸ் பண்ணு…! மாஸ் ஐடியா கொடுத்து தண்ணி குடிச்ச ‘ஸ்மார்ட்’ குரங்கு..!!”
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி மக்களின் இதயங்களை வென்று வரும் வீடியோவில், தாகத்தால் தவித்த லங்கூர் ஒன்று நீர் அருந்த முயலும் காட்சி இடம்பெற்றுள்ளது. தண்ணீர் குழாயின் மீது அமர்ந்திருந்த அந்த குரங்கிற்குத் தாமாகவே குழாயைத் திறந்து நீர் அருந்துவது கடினமாக இருந்தது. அதைக் கண்ட இளம்பெண் ஒருவர், குரங்கிற்கு உதவி செய்ய முன்வந்து குழாயைத் திறந்து தன் ஒரு கையில் நீரைப் பிடித்துக் குடிக்கக் கொடுத்தார்.
ஆனால், ஒரு கையில் பிடிக்கும் தண்ணீர் குரங்கின் தாகத்தைத் தணிக்கப் போதாது என்பதை உணர்ந்த அந்தச் சுட்டி குரங்கு, மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டது. அது அந்தப் பெண்ணின் கையைக் கீழே தள்ளி, தனது செய்கை மூலம் அந்தப் பெண்ணின் மற்றொரு கையையும் சேர்த்து இரு கரங்களாலும் நீரைப் பிடிக்குமாறு உணர்த்தியது. குரங்கின் புத்தி கூர்மையைப் புரிந்து கொண்ட அந்தப் பெண்ணும் இரு கரங்களையும் ஏந்தி, குரங்கு நன்றாகத் தாகம் தீரத் தண்ணீர் குடிக்க உதவினார்.
வழக்கறிஞர் நிஷாத் சோனி என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையவாசிகளிடையே பெருமளவில் வைரலாகி வருகிறது. மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையேயான இந்த அன்பான பிணைப்பையும், குரங்கின் அபாரமான புத்திசாலித்தனத்தையும் கண்டு நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும், குரங்கிற்கு அன்போடு உதவி செய்த அந்தப் பெண்ணின் கருணை உள்ளத்திற்குப் பலரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
