மனுஷனா இவன்?.. 2 மாத பச்சிளம் குழந்தையுடன் மனைவியை 4 ஆண்டுகளாக அறையில் அடைத்து நரகம் காட்டிய கொடூரன்.. இணையத்தில் வைரலாகும் திடுக்கிடும் தகவல்..!! – cinefeeds
Connect with us

CRIME

மனுஷனா இவன்?.. 2 மாத பச்சிளம் குழந்தையுடன் மனைவியை 4 ஆண்டுகளாக அறையில் அடைத்து நரகம் காட்டிய கொடூரன்.. இணையத்தில் வைரலாகும் திடுக்கிடும் தகவல்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் சங்கரூர் பகுதியில், கணவரால் 4 ஆண்டுகளாக ஒரு அறையில் அடைக்கப்பட்டு கொடூரத் சித்ரவதைகளுக்கு ஆளான பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின்படி, கடந்த நான்கு ஆண்டுகளாகக் கணவன் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியதுடன் போதிய உணவும் வழங்கவில்லை என்றும், இரண்டு மாதங்களுக்கு முன்பு தனக்குக் குழந்தை பிறந்த பின்னரும் கூட அந்தச் சிறைவாசம் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

4 साल तक एक कमरे में कैद… मारपीट, भूख और दर्द सहती रही एक मां।

पंजाब के संगरूर में एक महिला ने आरोप लगाया है कि उसके पति ने उसे 4 साल तक कमरे में बंद रखा, मारपीट की और भरपेट खाना तक नहीं दिया। महिला का कहना है कि दो महीने पहले बच्चे के जन्म के बाद भी उसे कैद रखा गया और पति… pic.twitter.com/WXQcx7f7d5— Mandeep RajBhar (@MandeepRajBhar9) July 23, 2026

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து அந்தப் பெண்ணையும் அவரது இரண்டு மாதக் குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். தற்போது அந்தப் பெண் தனது பெற்றோரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தன் மீதும் குழந்தை மீதும் இத்தகைய வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்ட கணவன் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அவர் கோரி வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in