நான் ரொம்ப நல்லவன், என்னை பிரதமராக்குங்க…வெறும் 10 பேர் சொன்னா போதும், நாளைக்கே பிரதமர் ரெடி…விஜய் பாணியில் அரசியல் எண்ட்ரி…ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிரடி வீடியோ…பிரசாந்த் ரங்கசாமி கொடுத்த மரண மாஸ் கவுண்டர்…! – cinefeeds
Connect with us

CINEMA

நான் ரொம்ப நல்லவன், என்னை பிரதமராக்குங்க…வெறும் 10 பேர் சொன்னா போதும், நாளைக்கே பிரதமர் ரெடி…விஜய் பாணியில் அரசியல் எண்ட்ரி…ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிரடி வீடியோ…பிரசாந்த் ரங்கசாமி கொடுத்த மரண மாஸ் கவுண்டர்…!

Published

on

தமிழ் திரையுலகில் இருந்து முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது காலம் காலமாகத் தொடரும் ஒரு ட்ரெண்டாக இருந்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத சூழலில் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அரசியல் வீடியோவும், அதற்குப் போட்டியாக சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி வெளியிட்டுள்ள கலாய் வீடியோவும் சமூக வலைத்தளங்களை மொத்தமாக ஆக்கிரமித்துள்ளன. நடன இயக்குநர், நடிகர், சமூக சேவகர் என முத்திரை பதித்த லாரன்ஸ், ஆரம்பத்தில் ரஜினியுடன் அரசியல் பயணம் செய்ய விரும்பியதாகவும், அப்போது அவரது அம்மா தடுத்ததாகவும் பல மேடைகளில் கூறியுள்ளார். ஆனால், தற்போது தனது நண்பன் விஜய் கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆன பிறகு, தனது அம்மாவே மனசு மாறி தனக்கு அரசியலுக்கு வரப் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ள லாரன்ஸ், “மக்களாகிய நீங்க ‘வாடா தம்பி’னு சொன்னா நான் அரசியலுக்கு வர தயார்” என்று உருக்கமாகப் பேசிய வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

லாரன்ஸின் இந்த அரசியல் ஆசைக்கு மத்தியில், அவரை மறைமுகமாக வறுத்தெடுக்கும் விதமாகப் பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. லாரன்ஸின் “நான் நல்லவன், மக்கள் சொன்னா அரசியலுக்கு வருவேன்” என்ற பாணியையும், அவரது உடல்மொழியையும் அப்படியே அச்சு அசலாகக் கிண்டல் செய்து பிரசாந்த் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “மக்களே, நான் இந்தியாவின் பிரதமராகலாம்னு இருக்கேன். ஏன்னா, நான் ஏகப்பட்ட நல்லது பண்ணியிருக்கேன். எனக்கு முதலமைச்சர் விஜய்யைத் தெரிஞ்சவங்களையும் தெரியும், பிரதமர் மோடியைத் தெரிஞ்சவங்களையும் தெரியும். இப்போ இங்க ‘காக்கரோச் ஜனதா பார்ட்டி’ அப்படின்னு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காங்க இல்ல? அதே மாதிரி நான் புதுசா ‘பாண்டா ஜனதா பார்ட்டி’ அப்படின்னு ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்” என்று நக்கலாகப் பேசியுள்ளார்.

Advertisement

மேலும் அந்த வீடியோவில், நேராக வடக்கு பக்கமெல்லாம் போய் விஷயங்களைக் கத்துக்கிட்டு, இந்தியா முழுக்கப் பிரச்சாரம் செய்யப் போவதாகக் கூறிய பிரசாந்த் ரங்கசாமி, “நான் ரொம்ப நல்லவன்! நீங்க ஒரு பத்து பேர் சேர்ந்து என்கிட்ட ‘நீங்க பிரதமராகுங்க பிரசாந்த்’ அப்படின்னு சொன்னீங்கன்னா, நாளைல இருந்தே நான் இந்தியாவுக்கு பிரதமராக ரெடியா இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?” என்று லாரன்ஸ் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் கதறவிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சியாக வெளியிட்ட வீடியோவை, பிரசாந்த் ரங்கசாமி தனது பாணியில் ‘பாண்டா ஜனதா பார்ட்டி’ என்று நக்கல் செய்து கலாய்த்திருப்பது நெட்டிசன்களுக்குச் செம்ம தீனியாக அமைந்து, இணையத்தைக் குலுங்கச் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in