LATEST NEWS
ஃபேஸ்புக் காதலால் வந்த வினை…அம்மா யாருடனோ பேசுறாங்க…6 வயது மகன் சொல்லிய ரகசியம்…கணவனின் எதிர்ப்பால் ஆத்திரம்! ரகசிய காதலனுக்காக பெற்ற மகனின் தந்தையை துடிக்க துடிக்க கொன்ற பெண்…!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பில்கானா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மனைவியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை சந்தையில் தரகராகப் பணியாற்றி வந்த மணீஷ் குப்தா என்பவருக்கும், தனியார் பள்ளி ஆசிரியை நிஹாரிகா காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது 6 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், இவர்களது குடும்ப வாழ்க்கை ஆரம்பத்தில் சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் (Facebook) மூலம் ஜம்முவைச் சேர்ந்த ஒரு இளைஞர் நிஹாரிகாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற, நிஹாரிகா விடிய விடிய அந்த இளைஞருடன் செல்போனில் பேசுவதையும், சாட்டிங் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் கணவர் மணீஷுக்குத் தெரியவரவே, அவர் நிஹாரிகாவின் நடத்தையைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நிஹாரிகா, தன் கணவர் மீது காவல் நிலையத்தில் பொய் வரதட்சணை கொடுமை வழக்கும் தொடர்ந்துள்ளார். எனினும், காவல்துறை இருவரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று நிஹாரிகா வீட்டில் யாருடனோ ரகசியமாகத் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை அவரது 6 வயது மகன் கவனித்துள்ளான். உடனே ஓடிச் சென்று தன் தந்தையிடம் அம்மா போனில் யாருடனோ ரகசியமாகப் பேசுகிறார் என்று கூறியுள்ளான். இதனால் கோபமடைந்த மணீஷ், நிஹாரிகாவிடம் சென்று மீண்டும் போனில் பேசியதைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற நிஹாரிகா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவன் மணீஷை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
