CRIME
“வா நம்ம வீட்டுக்கு போகலாம்” பிரிந்து சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன்… உயிரோடு தீ வைத்து கொளுத்திய மைத்துனர்… காப்பாற்ற சென்றவரும் பலி… பகீர் கிளப்பும் சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலத்தில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவியைத் திரும்ப அழைக்க மாமனார் வீட்டுக்குச் சென்ற லவ்பிரீத் சிங் என்ற வாலிபர், அவரது மைத்துனர் சஜன் சிங் என்பவரால் கொடூரமாகத் தீவைத்து கொளுத்தப்பட்டார். இந்த அதிர்ச்சித் தகவல் தற்பொழுது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மைத்துனர் சஜன் சிங் லவ்பிரீத் சிங் மீது தீவைத்த போது, அங்கு நின்றுகொண்டிருந்த குர்ஜித் கவுர் என்ற பெண் அவரைக் காப்பாற்றத் தீவிரமாக முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தக் குர்ஜித் கவுர் மீதும் தீப்பற்றியதால் அவரும் படுகாயமடைந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் படுகாயமடைந்த லவ்பிரீத் சிங் மற்றும் குர்ஜித் கவுர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
