அடுத்தடுத்து இடத்தை காலி பண்ணும் திமுக வாரிசுகள்.. ஜெகத்ரட்சகன் மகன், திருச்சி சிவா மகளைத் தொடர்ந்து சரிந்து விழும் திமுக கோட்டை.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்தடுத்து இடத்தை காலி பண்ணும் திமுக வாரிசுகள்.. ஜெகத்ரட்சகன் மகன், திருச்சி சிவா மகளைத் தொடர்ந்து சரிந்து விழும் திமுக கோட்டை.. அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

Published

on

திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வாரிசுகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமை மீதான கடும் அதிருப்தி காரணமாகவே தாங்கள் கட்சியை விட்டு விலகுவதாக விலகியவர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் திமுகவின் முக்கியப் புள்ளிகள் பலர் தவெக-வில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், கட்சியின் இலக்கிய அணிச் செயலாளர் வி.பி.கலைராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

Advertisement

ஏற்கனவே திமுகவின் மூத்த தலைவர் திருச்சி சிவாவின் மகள் காயத்ரி தவெக-வில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்பொழுது இந்த முக்கியப் பிரமுகர்களின் அடுத்தடுத்த இடப்பெயர்வு திமுகவிற்குப் பலத்த பின்னடைவாகவும், தவெக-விற்கு அரசியல் ரீதியாகப் பெரும் பலமாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in