டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 பணியிடங்கள்.. ரூ.15500 சம்பளம்.. உடனே அப்பளை பண்ணுங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 பணியிடங்கள்.. ரூ.15500 சம்பளம்.. உடனே அப்பளை பண்ணுங்க..!!

Published

on

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000 முதல் ரூ.15,500 வரை உதவித்தொகை சம்பளமாக வழங்கப்படும். இந்தத் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான பொதுக் கட்டணம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகிய நிலைகளின் அடிப்படையில் தகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ லிங்க்கான https://www.iob.bank.in/documents/d/guest/web-ad-750-vac-2026-27 என்பதைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in