LATEST NEWS
வங்கிகளில் 6,175 காலிப்பணியிடங்கள்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளையுடன் முடிவு… உடனே விண்ணப்பியுங்கள்…!!
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,175 ‘துணை மேலாளர்’ மற்றும் ‘நிர்வாகப் பயிற்சி அதிகாரி’ (PO/MT) பணியிடங்களை நிரப்புவதற்கான IBPS தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் முடித்த, 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணியிடங்களுக்கான தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வுகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். வங்கித் துறையில் அரசு வேலை பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு இதுவொரு மிகச் சிறந்த வாய்ப்ப என்பதால், ஆர்வமுள்ளவர்கள் கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க இன்றே விண்ணப்பிப்பது நல்லது.
