“டிகிரி முடிச்சவங்களுக்கு வங்கியில செம சான்ஸ்” PNB வங்கியில் 545 காலிப்பணியிடங்கள்… ரூ.85,000 வரை சம்பளம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிகிரி முடிச்சவங்களுக்கு வங்கியில செம சான்ஸ்” PNB வங்கியில் 545 காலிப்பணியிடங்கள்… ரூ.85,000 வரை சம்பளம்..!!

Published

on

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள லோக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: லோக்கல் ஆபிசர்

Advertisement
  • மொத்த காலிப்பணியிடங்கள்: 545
  • கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைத் பட்டம் (Degree) தேர்ச்சியுடன், வங்கித் துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).
  • சம்பளம்: மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும்.

தகுதியான நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு , உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ₹1,180 ஆகும். விருப்பமுள்ளவர்கள் PNB India என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in