LATEST NEWS
“அவனை அடிச்சப்போ பயந்துட்டேன்… ஆனா இப்போ ரொம்ப பெருமையா இருக்கு..!” அபிஜீத் திப்கே தாயின் நெகிழ்ச்சிப் பேட்டி..!!
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமை தாங்கினார். இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கப்பட்ட இந்த satirical அமைப்பு, வெயில், மழை மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளையும் மீறி உறுதியுடன் போராடியது. அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் மாணவர்கள் உறுதியாக இருந்தனர். இறுதியில், மாணவர்கள் கோரிக்கை ஏற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த ஐந்து வாரங்களாக அபிஜீத் திப்கே இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது அவரது பெற்றோருக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. போராட்டத்தில் அவர் தாக்கப்பட்டது குறித்தும், அவருக்கு என்ன நேருமோ என்ற பயத்தாலும் தாயார் அனிதா திப்கே மிகுந்த கவலை அடைந்தார். இதனால் தங்களது தூக்கமும் பசியும் முற்றிலுமாகப் போய்விட்டதாகவும், ஜூன் 7-ஆம் தேதிக்குப் பிறகு வீட்டின் எந்தச் செயலிலும் கவனம் செலுத்த முடியாமல் விடிய விடிய விழித்திருந்ததாகவும் அவர் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
தனது மகன் பட்ட கஷ்டங்களும், எதிர்கொண்ட சவால்களும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளதால், தற்போது அவர் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளார். மிகச் சிறிய வயதிலேயே அபிஜீத் திப்கே இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பதை எண்ணி, தாய் அனிதா திப்கே அவரைப் பாராட்டியுள்ளார். தான் நினைத்ததை சாதித்து காட்டிய மகனை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
