“என்னை மேடம்னு கூப்பிடாதீங்க…” 76 வயது செக்யூரிட்டி தாத்தாவுக்குச் சொந்த மகளாய் மாறி சர்ப்ரைஸ் கொடுத்த பெண்..! லட்சக்கணக்கான இதயங்களை வென்ற வைரல் வீடியோ.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை மேடம்னு கூப்பிடாதீங்க…” 76 வயது செக்யூரிட்டி தாத்தாவுக்குச் சொந்த மகளாய் மாறி சர்ப்ரைஸ் கொடுத்த பெண்..! லட்சக்கணக்கான இதயங்களை வென்ற வைரல் வீடியோ.!!

Published

on

76 வயதான ஒரு முதியவர் தனது குடும்ப சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரத்திற்காக இந்த வயதிலும் தினமும் 12 மணி நேரம் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி வருகிறார். ஓய்வுபெறும் வயதைத் தாண்டியும் உழைக்கும் இவரிடம், அந்தச் சொசைட்டியில் வசிக்கும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸரான பாயல் ராஜ்புத் என்பவர் அன்பாகப் பேசி பழகியுள்ளார். அந்த முதியவர் அவரை ‘மேடம்’ என்று அழைத்தபோது, “என்னை வெறும் பாயல் என்றே கூப்பிடுங்கள்” என்று கூறி அவரிடம் சொந்த குடும்ப உறுப்பினரைப் போன்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நாள், அந்த முதியவர் வைத்திருந்த பழைய பட்டன் போனைப் பார்த்த பாயல், அதில் புகைப்படம் எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை என்று சிரிக்க, மறுநாள் அவருக்கு ஒரு புதிய ஸ்மார்ட்போனைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த எதிர்பாராத பரிசைக் கண்டதும் அந்த முதியவர் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். புதிய போனில் அவர் முதலில் பார்க்க விரும்பியது ‘தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா’ என்ற நகைச்சுவைத் தொடர்தான். மேலும், பாயல் அவரை வீடியோ காலில் பேச வைத்தபோதும் அவர் உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DZ0M4pLIQYm/?utm_source=ig_web_button_share_sheet

அந்த முதியவரின் சொந்த மகளின் பெயரும் ‘பாயல்’ என்பதும், அவர் தற்போது அமெரிக்காவில் வசிப்பதால் தந்தையைப் பார்க்க வர முடியாமல் இருப்பதும் தெரியவந்தது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பாயல் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் முதுமைக் காலத்தில் அன்பையும் மரியாதையையும் பெறத் தகுதியானவர்கள். பிள்ளைகளால் அதைத் தர முடியாவிட்டால், நாம் அதைச் செய்வோம். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் அளிக்கும் மிகப்பெரிய பரிசு உங்கள் நேரம்தான், அவர்களைத் தனியாக விட்டுவிடாதீர்கள்” என்ற ஆழமான நெகிழ்ச்சிச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in