LATEST NEWS
“டீச்சிங்னா இப்படி இருக்கணும்..!” பவுடரும் கண்ணாடியும் போதும்… ஒளியின் எதிரொளிப்பை அசத்தலாகக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்..! பாராட்டும் நெட்டிசன்கள்..!!
அறிவியல் பாடத்தில் தியரியை விட பிராக்டிகல் மூலம் கற்பிப்பது மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இதனை உணர்ந்த நிதி குப்தா என்ற ஆசிரியர், வகுப்பறையிலேயே ஒளியின் எதிரொளிப்பு என்ற அறிவியல் விதியை மிக எளிமையான முறையில் மாணவர்களுக்குப் புரிய வைத்துள்ளார். வகுப்பறையை இருட்டாக்கி, லேசர் கற்றை மற்றும் கண்ணாடி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தச் சோதனையை அவர் செய்து காட்டியுள்ளார்.
ஒளி கண்ணாடியில் படும்போது எவ்வாறு எதிரொளிக்கிறது என்பதை மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில், ஒளியின் பாதையைக் காட்டுவதற்காகக் காற்றில் பவுடரையும் தூவிக் காட்டியுள்ளார். மிகவும் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்தின் வீடியோவை ஆசிரியர் நிதி குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதோடு, குழந்தைகளும் அறிவியலை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
https://www.instagram.com/reel/DbqOz7fTcMy/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆசிரியரின் இந்த முயற்சியைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இனி மாணவர்கள் இந்த அறிவியல் கருத்தை வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதே இல்லை என்றும் பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
