LATEST NEWS
“அய்யோ பாப்பா எங்கே..?” மொபைலில் மூழ்கிய தாய்… நைஸாகத் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை.. அடுத்த நடந்த கிளைமாக்ஸை நீங்களே பாருங்க.. உலகையே உலுக்கிய வைரல் வீடியோ!
பிரேசிலில் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வரும் வீடியோ ஒன்று, மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் அதிர்ச்சி சோதனையாக அமைந்துள்ளது. பெண் ஒருவர் தனது மொபைல் போனில் மூழ்கியிருந்த நேரத்தில், அவரது உறவினர் ஒருவர் அவருக்குத் தெரியாமல் அவரது குழந்தையை நைஸாகத் தூக்கிச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை அருகில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் தாய், பதற்றத்தின் உச்சத்திற்குச் சென்று அலறித் துடித்துள்ளார்.
مقطع متداول في البرازيل..
شخص قام بتجربة اجتماعية على إحدى قريباته فأخذ صغيرها بينما هي منشغلة بالهاتف شعرت المرأة بالذعر الشديد لحظة إدراكها اختفاء صغيرها أعاده لاحقاً وضربته من القهر.
صاحب التجربة أراد إثبات أن الانشغال بالجوال بإمكانه أن يفقدك أغلى ما تملك! pic.twitter.com/QLjcBK0ihS— sa3ud (@S6lb_) August 8, 2026
குழந்தை மாயமானதை அறிந்து அந்தத் தாய் கதறி அழுத தருணத்தில், சோதனையைச் செய்த நபர் குழந்தையைப் பத்திரமாக மீண்டும் கொண்டுவந்து ஒப்படைத்தார். இருப்பினும், தான் பட்ட கடுமையான பயம் மற்றும் பதற்றத்தின் ஆத்திரத்தில், அந்தத் தாய் தனது குழந்தையையே கோபத்துடன் அடித்துள்ளார். “கையடக்க மொபைல் போனில் கவனம் செலுத்துவதால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் நேசிக்கும் மிக முக்கியமான ஒன்றை நொடிப் பொழுதில் இழக்க நேரிடும்” என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே இந்தச் சமூக சோதனை நடத்தப்பட்டதாக வீடியோவை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.
