FLASH NEWS: “நகைப்பிரியர்களுக்குப் பேரிடி..!” ஒரே வாரத்தில் ரூ.6,000 எகிறிய தங்கம் விலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH NEWS: “நகைப்பிரியர்களுக்குப் பேரிடி..!” ஒரே வாரத்தில் ரூ.6,000 எகிறிய தங்கம் விலை..!!

Published

on

அண்மைக்காலமாகச் சற்று சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாள்களாக மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,220-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனையானது. ஆனால், சர்வதேசப் பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக, இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும் விற்பனையாகி வருகிறது.

ஒரே வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,960 வரை கணிசமாக உயர்ந்துள்ளது, நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் நாள்களில் சுபமுகூர்த்த தினங்களும் பண்டிகைக் காலங்களும் வரவுள்ள நிலையில், தங்கத்தின் இந்தத் தொடர் விலை உயர்வு நடுத்தரக் குடும்பங்களின் நகைக் கனவுக்குப் பலத்த அடியாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in