“விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுகிறார் சங்கீதா..?” நீதிமன்ற விசாரணையில் 20 நிமிட அதிரடி திருப்பம்.. நிம்மதி பெருமூச்சில் முதலமைச்சர் விஜய் தரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுகிறார் சங்கீதா..?” நீதிமன்ற விசாரணையில் 20 நிமிட அதிரடி திருப்பம்.. நிம்மதி பெருமூச்சில் முதலமைச்சர் விஜய் தரப்பு..!!

Published

on

முதலமைச்சர் விஜய்யுடனான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து மிக முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த விவாகரத்து வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. லண்டனில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இந்த விசாரணையில் ஆஜரான சங்கீதா, சுமார் 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது தரப்பு வாதங்களையும், கருத்துகளையும் விரிவாக முன்வைத்துப் பேசியுள்ளார்.

இதற்கிடையே, அடுத்த கட்ட விசாரணைக்கான தேதியை நீதிமன்றம் இன்று மாலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது வழக்கை முற்றிலும் வாபஸ் பெற சங்கீதா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த திடீர் திருப்பத்தின் காரணமாக, கடந்த சில மாதங்களாகத் தமிழக அரசியல் மற்றும் திரைத்துற வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக நீடித்து வந்த முதலமைச்சர் விஜய்யின் குடும்பப் பிரச்னை, தற்பொழுது சுமூகமான முடிவை நோக்கி நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in