2029-ல் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்… ராகுல் காந்தியே விஜயை பிரதமராக அமரவைப்பார்.. புதுக்குண்டை தூக்கிப்போட்ட கனிமொழி எம்.எல்.ஏ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

2029-ல் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்… ராகுல் காந்தியே விஜயை பிரதமராக அமரவைப்பார்.. புதுக்குண்டை தூக்கிப்போட்ட கனிமொழி எம்.எல்.ஏ..!!

Published

on

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் தான் என்று கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2025-ல் தான் கணித்தபடியே 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதலமைச்சரானது போல, வரும் 2029 மக்களவைத் தேர்தலில் அவர் நாட்டின் மிக முக்கிய தேசிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர், “2026-ல் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே பார்த்திருக்கும். இனி இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை டெல்லியில் இருந்து யாரும் முடிவு செய்யப் போவதில்லை; அதை தமிழ்நாட்டில் இருந்துதான் மக்கள் முடிவு செய்யப் போகிறார்கள்” என்று திட்டவட்டமாகக் கூறினார். 2029-ல் தமிழகத்திலிருந்து தான் நாட்டின் பிரதமர் உருவாகப் போகிறார் என்றும், ராகுல் காந்தி தான் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியிலும் அமர வைத்தார், அவரே பிரதமராகவும் அமர வைப்பார் என்றும் கூறியுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் 2029-ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் மாற்றமாகவும் அமையப் போகிறது என்று தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in