LATEST NEWS
“அய்யோ.. மோடி நின்ற இடத்தை அடியோடு க்ராப் செய்த பாகிஸ்தான்..!”அசல் படத்தை காட்டி அசிங்கப்படுத்திய இந்திய பிரதமர்.. SCO மாநாட்டில் வெடித்த இமாலயப் புகைப்படம் பூகம்பம்..!!
கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட குழுப் புகைப்படத்தில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நீக்கி எடிட் செய்த புகைப்படத்தைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் அலுவலகம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது மாபெரும் சர்வதேச விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. உச்சிமாநாட்டின் அமர்வுக்கு முன்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட புகைப்படத்தில் அசல் படத்தில் இருந்த மற்ற உலகத் தலைவர்களை அபத்தமான முறையில் நீக்கிவிட்டு, ஷெபாஸ் ஷெரிப் தன்னை மட்டும் மையத்தில் முன்னிறுத்தும் வகையில் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
இந்தச் சர்வதேச புகைப்பட மோசடியை உடைக்கும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அசல் புகைப்படத்தைப் பகிர்ந்து உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். அசல் புகைப்படத்தில் பாகிஸ்தான் பிரதமர் வலப்பக்கத்திலிருந்து நான்காவதாக நின்றிருந்ததும், பிரதமர் மோடி உட்பட ஐந்து உலகத் தலைவர்கள் அந்தப் படத்தில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டிருந்ததும் தற்பொழுது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. உலகத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் சர்வதேசக் கூட்டமைப்பின் புகைப்படத்தில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் செய்துள்ள இந்தச் சிறுபிள்ளைத்தனமான வேலை, சமூக வலைத்தளங்களில் உலக அளவில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகி வருகிறது.
