LATEST NEWS
தனுஷ் கட்சி ஆரம்பித்தால் முதல் ஆளாக ஒருவர் ஓடுவார்… அந்த ஆளு யார் தெரியுமா..? சீசனுக்கு சீசன் கட்சி மாறுவார்… தவெக முக்கிய புள்ளியை சாடிய ஆர்.எஸ் பாரதி..!
நடிகர் தனுஷ் கட்சி ஆரம்பித்தால் அதில் முதல் கையெழுத்து ஆதவ் அர்ஜுனா தான் போடுவார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் நேற்று பேசிய அவர், ஆதவ் அர்ஜுனா சீசனுக்கு சீசன் கட்சி மாறக்கூடிய ஒரு நபர் என்று சாடினார்.
சமீபகாலமாக நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக வெளியாகும் தகவல்களைக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, அவ்வாறு கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அதில் இணையும் முதல் நபர் ஆதவ் அர்ஜுனாவாகத்தான் இருக்கும் என்று எள்ளி நகையாடினார். அத்துடன், கடந்த 2001-ம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு 2006-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த வரலாற்று நிகழ்வையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசியல் சூழலை ஒப்பிட்டுப் பேசிய அவர், எந்தவிதமான நியாயமான காரணமும் இன்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை தற்போது கைது செய்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். கலைஞரின் கைதைத் தொடர்ந்து திமுக எழுச்சி பெற்றது போல, உதயநிதியின் இந்த கைதும் கட்சியின் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற தொனியில் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
