“சக்கரபாணி அண்ணன் கபடி பிளேயர்னு நினைக்கிறேன்” நிறைய சண்டை போடுவாரு… சட்டப்பேரவையை அதிரவைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் செம்ம லந்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சக்கரபாணி அண்ணன் கபடி பிளேயர்னு நினைக்கிறேன்” நிறைய சண்டை போடுவாரு… சட்டப்பேரவையை அதிரவைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் செம்ம லந்து..!!

Published

on

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு உள்கட்டமைப்புகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கிராமப்புறங்களில் இன்னமும் கபடி போட்டிகள் மண்ணில்தான் விளையாடப்பட்டு வருவதாகவும், தங்களது ஆட்சியில் அவற்றுக்கு நவீன விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு குறுக்கிட்டுப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சக்கரபாணி, முந்தைய ஆட்சிக் கால நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட முயன்றார்.

அப்போது சக்கரபாணியைப் பார்த்து நகைச்சுவையாகப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சக்கரபாணி அண்ணன் கபடி பிளேயர்னு நினைக்கிறேன்.. ஏன்னா எப்போப் பார்த்தாலும் நிறைய சண்டை போட்டுட்டே இருப்பாரு” என்று கலகலப்பாகக் கிண்டலடித்தார். அமைச்சரின் இந்தத் திடீர் மற்றும் சாதுரியமான பேச்சைக் கேட்டதும், அவை முன்னணியில் இருந்த சக்கரபாணி தர்மசங்கடமேதும் அடையாமல், இருக்கையில் அமர்ந்தபடியே குலுங்கி குலுங்கிச் சிரித்தார்.

Advertisement

அமைச்சரின் இந்த நகைச்சுவையான கருத்தால் அவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிற உறுப்பினர்களும் இந்த நகைச்சுவை விவாதத்தை வெகுவாக ரசித்துச் சிரித்தனர். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற அரசியல் எல்லைகளைத் தாண்டி, இரு தரப்பினரும் இணக்கமாகச் சிரித்துப் பேசி மகிழ்ந்த இந்த கலகலப்பான தருணம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in