LATEST NEWS
ஐயோ கொடுமையே… 4 மணி நேர கொடூர தண்டனை… மனமுடைந்த 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி…! பள்ளியில் நடந்த பேரவலம்… கதறித் துடிக்கும் பெற்றோர்..!!
ஹரியானா மாநிலம் பரீதாபாத், டபுவா காவல் எல்லைக்குட்பட்ட காஜிபூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டனையாக அந்த மாணவியை வகுப்பறைக்கு வெளியே சுமார் 4 மணி நேரம் நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பள்ளிக் கட்டிடத்தின் மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பெரும் குழப்பமும் பதற்றமும் நிலவியது. மாணவி மேலே இருந்து கீழே விழுந்ததும், பள்ளி ஊழியர்களும் மற்றவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தண்டனை காரணமாகவே மாணவி இந்த முடிவை எடுத்ததாகப் பெற்றோர் தீவிரமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும், மாணவிக்கு எதற்காகத் தண்டனை வழங்கப்பட்டது மற்றும் சம்பவத்திற்கு முன் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தகவல் அறிந்த டபுவா காவல் நிலையப் காவல்துறையினர் சிவில் மருத்துவமனைக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவி எவ்வாறு மாடிக்குச் சென்றார் என்பதைக் கண்டறியவும், தண்டனை குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறியவும் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். உண்மைகள் வெளிய வந்த பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் நிலைய அதிகாரி சுமேர் சிங் தெரிவித்துள்ளார்.
