LATEST NEWS
“பில்லி, சூனியத்துல எங்களுக்கு நம்பிக்கை இல்லை” – நாகதோஷப் பரிகாரம் கேட்ட ஓபிஎஸ்-ஸை ‘பகுத்தறிவு’ அடியால் வாரிச் சுருட்டிய அமைச்சர் அருண்ராஜ்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‘நாகதோஷம்’ குறித்துக் கேட்ட விசித்திரமான கேள்வி அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வினாக்கள் விடை நேரத்தின் போது பேசிய அவர், தமிழகம் முழுவதுமே தற்போது பாம்புகடிப் பிரச்சினை மிகத் தீவிரமாக இருப்பதாகவும், இதனால் பல்வேறு தொகுதிகளிலும் ‘நாகதோஷம்’ இருப்பதாகத் தான் அறிவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், இந்தத் தொகுதிகளில் இருக்கும் நாகதோஷத்தைக் கழிக்க ஏதேனும் சிறப்புப் பிரார்த்தனைகளைச் செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை முன்வருமா என்று சற்றும் எதிர்பாராத கேள்வியைக் கிளப்பினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்திடம் ஆன்மீகப் பரிகாரம் குறித்து அவர் கேள்வி எழுப்பியது அவையிலிருந்த ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், “நமது முதலமைச்சர் தலைமையிலான அரசு முற்றிலும் ஒரு அறிவியல்பூர்வமான அரசு” என்று கம்பீரமாகத் தெரிவித்தார். மேலும், பில்லி, சூனியம், தோஷம் போன்ற மூடநம்பிக்கைகளில் தங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என்று அவர் மிகத் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்தார். அமைச்சரின் இந்த பகுத்தறிவு கலந்த சுளீர் பதிலால் சட்டப்பேரவை வளாகமே சில நிமிடங்கள் பலத்த சிரிப்பொலியில் மூழ்கியது.
