LATEST NEWS
கொடூரத்தின் உச்சம்..! ₹344-க்கு பதில் ₹700 கேட்ட ரேபிடோ டிரைவர்… மறுத்த பெண்ணை காரில் இருந்து தள்ளி, காலில் காரை ஏற்றிய அராஜகம்.. கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!
கூடுதல் பணம் தர மறுத்த காரணத்திற்காக, ரேபிடோ வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பெண் பயணி ஒருவரின் காலில் காரை ஏற்றிச் சென்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது பயணத்திற்காக ரேபிடோ செயலி மூலம் கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். ஆனால், செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பயன்பாட்டில் காட்டிய ₹344 கட்டணத்திற்குப் பதிலாக ₹700 கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று அராஜகமாகப் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு அந்தப் பெண், தனது ரேபிடோ செயலியில் காட்டிய அதே அதிகாரப்பூர்வ தொகையை மட்டுமே தருவேன் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் ஓட்டுநர் கடும் கோபமடைந்து, அந்தப் பெண்ணை நோக்கி மிக மோசமான வார்த்தைகளால் வசியுள்ளார். அத்துடன் நிற்காமல், ஓடும் காரில் இருந்து அந்தப் பெண்ணை வெளியே தள்ளிவிட்டு, அவரது காலின் மீதே காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் அந்தப் பெண்ணின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய ஓட்டுநரே இப்படி அநாகரிகமாகவும், வன்முறையோடும் நடந்துகொண்டது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறை அந்த ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
