நெஞ்சை உறைய வைத்த கொடூரம்..! அப்பா தூக்கில் தொங்குவதை அலறாமல் வீடியோ எடுத்த 7 வயது மகன்… மர்ம மரணத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்..? வெளியான திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை உறைய வைத்த கொடூரம்..! அப்பா தூக்கில் தொங்குவதை அலறாமல் வீடியோ எடுத்த 7 வயது மகன்… மர்ம மரணத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்..? வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

ஹரியானா மாநிலம் குருக்ராமின் சூரத் நகர் பகுதியில் வசித்து வந்த 36 வயதான சஞ்சீவ் யாதவ் என்ற மல்டிநேஷனல் கம்பெனி ஊழியர், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த சமயத்தில், வீட்டில் சஞ்சீவின் மனைவியும் அவரது 7 வயது மகனும் மட்டுமே இருந்துள்ளனர். சஞ்சீவ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த அந்த கோரமான தருணத்தில், அவரது மனைவி அலறியடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைக்க, அதே நேரத்தில் அவரது 7 வயது மகன் தனது மொபைல் போனில் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டு நின்றுள்ளான். இந்த விசித்திரமான மற்றும் நெஞ்சை உறைய வைக்கும் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தசரஸை பூர்வீகமாகக் கொண்ட சஞ்சீவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக விவாகரத்து பெறுவது தொடர்பாகத் தீவிரமான குடும்பத் தகராறு நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சஞ்சீவின் தங்கை மற்றும் தந்தை அளித்துள்ள புகாரில், மனைவி விவாகரத்து கேட்டுத் தொடர்ந்து கொடுத்த கடுமையான மன உளைச்சல் மற்றும் மிரட்டல் காரணமாகவே சஞ்சீவ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சஞ்சீவின் தந்தை தனது மருமகள் சில ஆட்களுடன் சேர்ந்து திட்டமிட்டுத் தனது மகனைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போல நாடகமாடுகிறார் என்ற கடுமையான சந்தேகத்தையும் காவல்துறையினரிடம் முன்வைத்துள்ளார்.

Advertisement

பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள குருக்ராம் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் சஞ்சீவின் மனைவியைக் உடனடியாகக் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சீவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது முழுமையாகத் தெரியவரும் என விசாரிக்கும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், தந்தை தூக்கில் தொங்கும்போது 7 வயது சிறுவன் எதற்காக வீடியோ எடுத்தான் என்ற கோணத்திலும் போலீசார் சிறுவனிடம் உளவியல் ரீதியாக விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in