CRIME
அடி பாதவத்தி..! 10 வருசம் சந்தோஷமா இருந்த குடும்பம்.. ஒத்த ராங் காலால் வந்த வினை… 2 பிள்ளைகளைத் தவிக்கவிட்டு ஓட்டம் பிடித்த தாய்… கணவனுக்கு அடுத்து காத்திருந்த அதிர்ச்சி… கள்ளக்காதலன் வாக்குமூலம் கொடுத்த திக் திக் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – சோபா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சோபாவிற்கு மொபைல் போனில் வந்த ஒரு ‘ராங் கால்’ மூலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி நாயக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், காதலன் மீது கொண்ட கண்மூடித்தனமான மோகத்தால் சோபா ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவன் மற்றும் இரு பிஞ்சுக் குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு பாலாஜியுடன் வீட்டை விட்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் சிரஞ்சீவி, இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகாரளித்தார்.
கணவர் கொடுத்த புகாரை போலீசார் ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், சிரஞ்சீவி தனது சொந்த முயற்சியால் மனைவியைத் தேடி அலைந்தார். அப்போது சோபாவும் அவரது கள்ளக்காதலன் பாலாஜியும் பெங்கிலாப்பள்ளி பகுதியில் வசித்து வருவதோடு, குப்பத்தில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாகத் திருமணமும் செய்து கொண்டதை சிரஞ்சீவி கண்டுபிடித்தார். உடனே தனது உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் கள்ளக்காதல் ஜோடியை கச்சிதமாகப் பிடித்த சிரஞ்சீவி, அவர்களை அங்கிருந்த கிராமப் பஞ்சாயத்து மற்றும் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தினார்.
ஊர்ப் பெரியவர்கள் நடத்திய அதிரடி விசாரணையின் போது, கள்ளக்காதலன் பாலாஜி நாயக் ஒட்டுமொத்த பஞ்சாயத்து முன்னிலையிலும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை ஒப்புக்கொண்டார். சோபாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, அவர்கள் இருவரும் இணைந்து கணவர் சிரஞ்சீவியை வழிமறித்துக் கொலை செய்யப் பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியிருந்ததை அவன் பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தான். கணவரின் சமயோசித புத்தியால் இந்த கொலைச் சதி முறியடிக்கப்பட்டு, அவர் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து குப்பம் டிஎஸ்பி பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் தற்பொழுது தப்பியோட முயன்ற கள்ளக்காதல் ஜோடியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
