LATEST NEWS
இந்த காலத்திலுமா இப்படி..? அண்ணன் கட்டிய மனைவி தம்பிகளுக்கும் மனைவியே… ஏன் தெரியுமா..? அதிர்ச்சிக்குள்ளாக்கும் பரபரப்பு பின்னணி..!!
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ்-கிரி பகுதியில் வாழும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பல நூற்றாண்டுகளாக ஒரு விசித்திரமான திருமண வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. திரௌபதி திருமண முறையைப் போன்ற இந்த வழக்கத்தின்படி, அச்சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆணுக்குத் திருமணம் நடந்தவுடன், அவனது உடன்பிறந்த சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் அந்தப் பெண் பொதுவான மனைவியாகி விடுகிறார். “சகோதர பலதார மணம்” என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையின் கீழ், பிறக்கும் குழந்தைகளுக்கு மூத்த சகோதரரே தந்தையாகக் கருதப்படுகிறார்.
நவீன உலகம் இவ்வளவு வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்திலும் இப்படியொரு பழங்கால வழக்கம் தொடர்வதற்குப் பின்னால் வலுவான சமூக-பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. இப்பகுதியில் நிலவும் கடுமையான வறுமை மற்றும் வாழ்வாதாரப் பற்றாக்குறை மிக முக்கியக் காரணமாகும். மேலும், தனித்தனியாகத் திருமணம் செய்து கொண்டால் குடும்பத்தின் விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் துண்டு துண்டாகப் பிரிந்துவிடும் என்பதால், சொத்துக்கள் சிதறாமல் ஒரே குடும்பத்திற்குள் கூட்டுறவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விசித்திர விதியை அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இருப்பினும், தற்போதைய இளந்தலைமுறையினர் மத்தியில் கல்வி அறிவு பெருகி வருவதாலும், நவீன சிந்தனைகள் பரவி வருவதாலும் இந்த விசித்திரமான பாரம்பரியம் மெல்ல மெல்ல மாறி வருகிறது. பல இளைஞர்கள் இந்த கூட்டுத் திருமண முறையைத் தவிர்த்து, தனித்தனித் திருமணங்களைச் செய்யத் தொடங்கியுள்ளனர். வறுமை மற்றும் சொத்து பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்ட இந்த வழக்கம், மாறிவரும் சமூகச் சூழலால் ஹட்டி பழங்குடியின மக்களிடையே தற்போது ஒரு மறைந்து வரும் கலாச்சாரமாக மாறிக்கொண்டிருக்கிறது.
