புது நடிகைன்னா அவ்வளவு மலிவா?…ராதிகா பாராட்டிய நடிகைக்கு போஸ்டரில் இடமில்லையா?…மமிதா பைஜுவுக்கு நேர்ந்த அவமானம்…சினிமா துறை மாறணும்…” – மமிதா பைஜுவுக்காக சூர்யா படக்குழுவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி…! – cinefeeds
Connect with us

CINEMA

புது நடிகைன்னா அவ்வளவு மலிவா?…ராதிகா பாராட்டிய நடிகைக்கு போஸ்டரில் இடமில்லையா?…மமிதா பைஜுவுக்கு நேர்ந்த அவமானம்…சினிமா துறை மாறணும்…” – மமிதா பைஜுவுக்காக சூர்யா படக்குழுவை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி…!

Published

on

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பட்டாம்பூச்சி’ லிரிக்கல் வீடியோ நேற்று வெளியானது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து, 300 கோடி ரூபாய் வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் ஆன ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்படம் வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மமிதா பைஜு கதாநாயகியாகவும், ராதிகா முக்கிய வேடத்திலும் நடித்துள்ள இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

படம் குறித்த எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, வெளியான முதல் சிங்கிள் போஸ்டரில் கதாநாயகி மமிதா பைஜுவின் பெயர் விடுபட்டிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷனல் நடிகையான மமிதாவின் நடிப்பை மூத்த நடிகை ராதிகாவே பாராட்டியுள்ள சூழலில், போஸ்டரில் மற்ற அனைவரின் பெயர்களும் இடம்பெற்று, மமிதாவின் பெயர் மட்டும் புறக்கணிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த விவகாரம் குறித்து நடிகை சனம் ஷெட்டி தனது எக்ஸ் (X) பக்கத்தில் மிகவும் காட்டமாகப் பேசியுள்ளார். மமிதா பைஜு தனது திறமையால் வளர்ந்து இவ்வளவு பெரிய படத்தில் நடித்துள்ள நிலையில், அவர் புதிய நடிகையாக இருந்தாலும் சமமான மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், “சினிமா துறை மாற வேண்டும், இப்படிப்பட்ட மாற்றங்கள் இப்பொழுதே தொடங்க வேண்டும்” என சனம் ஷெட்டி பதிவிட்டுள்ள இந்த போல்டான கருத்து சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in