அமைச்சர்கள் விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார், ஜெகதீஸ்வரிக்கு கல்தா..? சட்டப்பேரவை முடிந்ததும் காத்திருக்கும் அதிர்ச்சி.. முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமைச்சர்கள் விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார், ஜெகதீஸ்வரிக்கு கல்தா..? சட்டப்பேரவை முடிந்ததும் காத்திருக்கும் அதிர்ச்சி.. முதல்வர் விஜய் எடுத்த திடீர் முடிவு..!!

Published

on

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகப் பிரபல தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியில் அமைச்சர்கள் விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார் மற்றும் ஜெகதீஸ்வரி ஆகிய மூவரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் செயல்பாடுகளிலும், அரசு நிர்வாகத்திலும் தொய்வின்றிச் செயல்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் முதல்வர் இந்த அதிரடி முடிவை எடுக்கவுள்ளதாக அந்த நாளிதழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பதவிகளைப் பறிப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த அமைச்சரவையில் உள்ள இலாகாக்களை முழுமையாகக் கலைத்துவிட்டுப் புதிதாக மாற்றி அமைக்கவும் முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய அமைச்சரவையில் உள்ள சில மூத்த அமைச்சர்களின் (சீனியர்கள்) துறைகளையும் மாற்றி, புதிய பொறுப்புகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த அதிரடி அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகாக்கள் மாற்றம் குறித்த செய்திகள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in