FLASH:3,000 கோயில்களில்.. தவெக ஆட்சியின் அதிரடி மாஸ்டர் பிளான்… பஜெட்டில் வெளியான அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH:3,000 கோயில்களில்.. தவெக ஆட்சியின் அதிரடி மாஸ்டர் பிளான்… பஜெட்டில் வெளியான அறிவிப்பு..!!

Published

on

மாநில பட்ஜெட்டில் ஆன்மீக மற்றும் பாரம்பரியச் சின்னங்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுப் பிரம்மாண்டமாகப் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாகப் பழமையான வரலாற்றுச் சிறப்புகளை மீட்டெடுக்கும் நோக்கில் 250 கோயில் குளங்கள் மற்றும் 75 திருக்கோயில் தேர்கள் முழுமையாகச் சீரமைக்கப்படும். மேலும், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 213 வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களை கண்டறிந்து அவற்றைப் புனரமைக்கப் பிரத்யேக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறைகள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் முழு வீச்சில் சீரமைக்கப்படும். வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, ஆன்மீகச் சுற்றுலாவுக்கு வரும் பக்தர்களின் பயணத்தை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதே இந்தத் திட்டங்களின் முதன்மை நோக்கமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in